புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பேட்டிங்கில் எங்கு தவறு செய்தோம் என்பதில் கவனம் கொடுக்க வேண்டும்: ஷஃபாலி வர்மா

ஒரு அணியாக பேட்டிங்கில் எங்கு தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

shafali verma

ஷஃபாலி வர்மா - படம் | AP

Published On :

ஒரு அணியாக பேட்டிங்கில் எங்கு தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன் பின், 127 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நிலையில், ஒரு அணியாக பேட்டிங்கில் எங்கு தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் ஒரு அணியாக பேட்டிங்கில் என்ன தவறு செய்தோம் என்பதில் கவனம் கொடுத்து எங்களை முன்னேற்றிக் கொள்வோம். தாய்லாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்துவிட்டது. அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த உள்ளோம். துபையில் உள்ள ஆடுகளங்களில் இதற்கு முன்பாக விளையாடியுள்ளோம். எங்களுக்கு இங்குள்ள ஆடுகளங்களின் தன்மை குறித்து தெரியும். புதிய பந்து பேட்டுக்கு நன்றாக வருவதால் நன்றாக விளையாட முடிகிறது. பந்து பழையதானதும் ஆடுகளத்தில் நின்று மெதுவாக வருகிறது. தாய்லாந்து வீராங்கனைகள் நன்றாக பந்துவீசினார்கள் என்றார்.

நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 36 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian opener Shafali Verma has stated that the team needs to focus on where they went wrong with their batting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.