இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு! பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த தொடரில் விளையாட வங்கதேச அணி இடம்பெற்றிருந்த நிலையில், இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல்போக்கு காரணமாக, தங்களுக்கான போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால், வங்கதேசத்தின் கோரிக்கைக்கு பாகிஸ்தானை தவிர மற்ற உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஐசிசியும் மறுத்துவிட்டது. இதன் விளைவாக வங்கதேச அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என்று அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்தது.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”வெளியுறவுக் கொள்கை தொடர்பான விஷயங்களில் அரசாங்கங்களின் அதிகாரத்தை மதிக்கிறோம். ஆனால், திட்டமிடப்பட்ட போட்டியைத் தவிர்க்குமாறு தேசிய அணிக்கு உத்தரவிடுவது சர்வதேச விளையாட்டின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முரணானது.

ஐசிசி போட்டிகள் நியாயம், நேர்மை மற்றும் போட்டி சமநிலை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. ஒரு அணியுடனான போட்டியில் மட்டும் விளையாட மாட்டேன் என்பது அந்தக் கொள்கைகளை பலவீனப்படுத்தி, நிகழ்வின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து முறையான தகவலுக்காக இன்னும் காத்திருக்கிறோம். நீண்ட கால விளைவுகளை கவனமாக மதிப்பிட்டு பிசிஐ முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 போட்டியைச் சீராக நடத்துவதே தனது முதன்மை நோக்கம். வெற்றிகரமான போட்டியை நடத்துவது அனைத்து உறுப்பு வாரியங்களின் கூட்டுப் பொறுப்பு” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கும் பட்சத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த தொடரின் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கக் கூடிய ரூ. 300 கோடி வருமானத்தை ஐசிசி அளிக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Boycott of the match against India! ICC warns Pakistan!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)
டி20 உலகக் கோப்பையில் விளையாடுவோம்; இந்தியாவுடன் இல்லை: பாகிஸ்தான் அரசு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com