

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுவரை 6 வெவ்வேறு அணிகள் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. நடப்பு சாம்பியன் இந்திய அணி உள்பட மூன்று அணிகள் டி20 உலகக் கோப்பையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணியும் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
20 அணிகளின் வீரர்கள் விவரம்
எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும், அதன் வீரர்கள் விவரமும் பின்வருமாறு,
1. ஆப்கானிஸ்தான் 2. ஆஸ்திரேலியா 3. கனடா 4. இங்கிலாந்து 5.இந்தியா 6. அயர்லாந்து 7. இத்தாலி 8. நமீபியா 9. நேபாளம் 10.நெதர்லாந்து 11. நியூசிலாந்து 12. ஓமன் 13. பாகிஸ்தான் 14.ஸ்காட்லாந்து 15. தென்னாப்பிரிக்கா 16. இலங்கை 17.அமெரிக்கா 18. ஐக்கிய அரபு அமீரகம் 19. மேற்கிந்தியத் தீவுகள் 20. ஜிம்பாப்வே
ஆப்கானிஸ்தான்
ரஷீத் கான் (கேப்டன்), நூர் அகமது, அப்துல்லா அகமதுஸாய், செதிக்குல்லா அடல், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ரஹ்மனுல்லா குர்பாஸ், நவீன் உல் ஹக், முகமது இஷாக், ஷகிதுல்லா கமல், முகமது நபி, குல்பதீன் நைப், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், முஜீப் உர் ரஹ்மான், டார்விஷ் ரசூலி, இப்ரஹீம் ஸத்ரன்.
ஆஸ்திரேலியா
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சேவியர் பார்ட்லெட், ஜோஷ் இங்லிஷ், கூப்பர் கன்னோலி, மேத்யூ குன்ஹீமேன், பாட் கம்மின்ஸ், கிளன் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
கனடா
தில்பிரீத் பஜ்வா (கேப்டன்), அஜய்வீர் ஹுண்டால், அனுஷ் படேல், திலான் ஹேலிகர், ஹர்ஷ் தாக்கர், ஜஸ்கரன்தீப் புட்டார், கலீம் சனா, கன்வர்பால், நவ்நீத் தலிவால், நிக்கோலஸ் கிர்டான், ரவீந்தர்பால் சிங், சாத் பின் ஸாஃபர், ஷிவம் சர்மா, ஷ்ரேயாஸ் மோவா, யுவ்ராஜ் சம்ரா.
இங்கிலாந்து
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் பாண்டன், ஜேக்கோப் பெத்தேல், ஜாஸ் பட்லர், சாம் கரண், லியம் டாஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டங், லூக் வுட்.
இந்தியா
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
அயர்லாந்து
பால் ஸ்டிரிலிங் (கேப்டன்), மார்க் அடாய்ர், ராஸ் அடாய்ர், பென் காலிட்ஸ், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜியார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டார், டிம் டெக்டார், லோர்கான் டக்கர், பென் வொயிட், கிரைக் யங்.
இத்தாலி
வயான் மேட்சன் (கேப்டன்), மார்கஸ் கேம்போபியானோ, ஜியான் பியரோ, ஜெயின் அலி, அலி ஹாசன், கிறிசன் ஜார்ஜ், ஹாரி மனேண்ட்டி, அந்தோனி மோஸ்கா, ஜஸ்டின் மோஸ்கா, சையத் நக்வி, பெஞ்சமின் மனேண்ட்டி, ஜஸ்பிரித் சிங், ஜேஜே ஸ்மட்ஸ், கிராண்ட் ஸ்டீவர்ட், தாமஸ் டிராகா.
நமீபியா
ஜெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), ஸேன் கிரீன், பெர்னார்டு ஷால்ட்ஸ், ரூபென், ஜேஜே ஸ்மித், ஜேன் ஃபிரைலிங்க், லோரென் ஸ்டீன்கம்ப், மலன் க்ரூகர், நிக்கோல் லாஃப்டி ஈட்டன், ஜேக் பிரஸ்ஸெல், பென் ஷிக்காங்கோ, ஜேசி பால்ட், டைலான் லெய்ச்சர், டபிள்யூபி மைபர்க், மாக்ஸ் ஹெனிங்கோ.
நேபாளம்
ரோஹித் பௌடல் (கேப்டன்), தீபேந்திர சிங் அய்ரி, சந்தீப் லாமிசேன், குசால் புர்டெல், ஆசிஃப் ஷேக், சந்தீப் ஜோரா, ஆரிஃப் ஷேக், பஷீர் அகமது, சோம்பல் கமி, கரண், நந்தன் யாதவ், குல்ஷன் ஜா, லலித் ராஜ்பன்ஷி, ஷேர் மல்லா, லோகேஷ் பாம்.
நெதர்லாந்து
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), காலின் ஆக்கர்மேன், நோவா க்ரோஸ், பாஸ் டி லீட், ஆர்யன் தட், பிரெட் கிளாசென், கைல் க்ளெய்ன், மைக்கேல் லெவிட், சாக் லயன்-கேஷெட், மேக்ஸ் ஓ'டவுட், லோகன் வான் பீக், டிம் வான் டெர் கியூக்டன், ரோல்ஃப் வான் டெர் மேர்வ், பால் வான் மேக்ரென், சஹிப் ஷூல்பிகர்.
நியூசிலாந்து
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்ஃபெர்ட், ஈஷ் சோதி.
ஓமன்
ஜதீந்தர் சிங் (கேப்டன்), விநாயக் சுக்லா (துணைக் கேப்டன்), முகமது நதீம், ஷகீல் அகமது, ஹம்மாத் மிர்ஸா, வாசிம் அலி, கரண் சோனாவாலே, ஃபைசல் ஷா, நதீம் கான், சூஃப்யான் மெஹ்முத், ஜே ஒதேத்ரா, ஷஃபீக் ஜேன், ஆஷிஷ் ஒதேத்ரா, ஜித்தன் ரமணந்தி, ஹஸ்னைன் அலி ஷா.
பாகிஸ்தான்
சல்மான் அலி அகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபஹீம் அஸ்ரஃப், ஃபகர் ஸமான், கவாஜா முகமது நஃபி (கீப்பர்), முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்ஸா, நஷீம் ஷா, ஷஹிப்ஸதா ஃபர்ஹான் (கீப்பர்), சைம் ஆயுப், ஷாஷீன் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
ஸ்காட்லாந்து
ரிச்சி பெர்ரிங்டான் (கேப்டன்), டாம் ப்ரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கர்ரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஷைனுல்லா இஷான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், ஃபின்லே மெக்ராத், பிரண்டன் மெக்முல்லன், ஜியார்ஜ் முன்சே, சஃப்யான் ஷரீஃப், மார்க் வாட், பிராட்லீ வீல்.
தென்னாப்பிரிக்கா
அய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயிண்டன் டி காக், டோனி டி ஸார்ஸி, டெவால்டு பிரெவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரைரா, மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, க்வெனா மபாகா, லுங்கி இங்கிடி, ஜேசன் ஸ்மித், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ஆண்ட்ரிச் நார்க்கியா.
இலங்கை
தாசுன் ஷானகா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமில் மிஷாரா, குஷல் பெரேரா, தனஞ்ஜெயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, ஜனித் லியாநாகே, சரித் அசலங்கா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயகே, சஹான் அராச்சிக், வனிந்து ஹசரங்கா, துனில் வெல்லாலகே, மிலன் ரத்நாயகே, நுவான் துஷாரா, ஈஷன் மலிங்கா, துஷ்மந்தா சமீரா, பிரமோத் மதுஷன், மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா, மஹீஷ் தீக்ஷனா, துஷான் ஹேமந்தா, விஜயகாந்த் வியாஸ்காந்த், டிரவீன் மேத்யூ.
ஐக்கிய அரபு அமீரகம்
முகமது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் சர்மா, துருவ் பராஷர், ஹைதர் அலி, ஹர்ஷித் கௌசிக், ஜுனைத் சித்திக், மயங்க் குமார், முகமது அர்ஃபான், முகமது ஃபாரூக், முகமது ஜவாதுல்லா, முகமது சோஹைப், ரோஹித் கான், சோஹைப் கான், சிம்ரஞ்சித் சிங்.
அமெரிக்கா
மோனங்க் படேல் (கேப்டன்), ஜெஸ்ஸி சிங்(துணைக் கேப்டன்), ஆன்ட்ரிஸ் கூஸ், ஷெஹான் ஜெயசூர்யா, மிலிந்த் குமார், ஷயான் ஜஹாங்கீர், சாய் தேஜா முக்கம்மலா, சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹர்மீத் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, ஷேட்லி வான் ஷல்க்விக், சௌரப் நேத்ராவல்கர், அலி கான், முகமது மொசின், ஷுபம் ரஞ்சனே.
மேற்கிந்தியத் தீவுகள்
சாய் ஹோப் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டி, ஷிம்ரன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மன் பௌவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, குவெண்டின் சாம்ப்சன், ஜேடன் சீல்ஸ், ரோமாரியோ ஷெப்பர்டு.
ஜிம்பாப்வே
சிக்கந்தர் ராஸா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரீம் கிரிமர், பிராட்லி ஈவன்ஸ், கிளைவ் மடாண்ட், டினோடெண்டா மபோசா, மருமானி, வெலிங்டன் மசகட்ஸா, டோனி முனியோங்கா, தாஷிங்கா முஷேகிவா, பிளெஸ்ஸிங் முஸராபானி, டியான் மேயர்ஸ், ரிச்சர்ட் நிகராவா, பிரண்டன் டெய்லர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.