

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு ஆதரவு தெரிவித்து விலக இருப்பதாக பிசிபி தலைவர் கூறிய நிலையில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விளையாடாத பாகிஸ்தான் அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவிருக்கிறது.
பாகிஸ்தான் அணி 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சல்மான் அலி அஹா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ராஃப் அணியில் தேர்வாகாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த வீரர் முகமது ரிஸ்வானும் சேர்க்கப்படவில்லை. வரும் பிப்.7ஆம் தேதி முதல் இந்தப் போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
பாகிஸ்தான் அணி: சல்மான் அலி அஹா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபஹீம் அஸ்ரஃப், ஃபகர் ஸமான், கவாஜா முகமது நஃபி (கீப்பர்), முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்ஸா, நஸீம் ஷா, ஷஹிப்ஸதா ஃபர்ஹான் (கீப்பர்), சைம் ஆயுப், ஷாஷீன் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.