24,300 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்வு!!சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

தடையிலிருந்து தப்பிய பாகிஸ்தான் வீரர்... ஊக்க மருந்து சோதனையில் சிக்காதது எப்படி?

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர், தடையிலிருந்து தப்பியது எப்படி என்பதைப் பற்றி...

News image

முகமது நவாஸ்.

Updated On :17 ஜூலை 2026, 4:40 pm IST

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ், தடையிலிருந்து தப்பித்திருக்கிறார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. வழக்கமான போட்டிகள் இந்தியாவிலும், பாகிஸ்தானுக்கான போட்டிகள் இலங்கையிலும் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நவாஸ், ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் நவாஸ், கார்பாக்ஸி-டிஹெச்சி என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது சோதனையில் கண்டறியப்பட்டது.

32 வயதான நவாஸ், பிப். 7 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின்போது பயன்படுத்தியதாகவும், இது உடலுக்கும் விளையாட்டுக்கும் தொடர்பில்லாதது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதை அவர் ஒப்புக்கொண்டதால் அவருக்கான தற்காலிக தடை, மே 1 ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டது. மேலும், அவரின் தவறை ஒப்புக்கொண்டதால், ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டு அவர், இந்தத் தடையிலிருந்து தப்பித்திருக்கிறார்.

ஐசிசி ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளின்படி, பிப். 7 ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிராக போட்டியில் நவாஸ் செய்த சாதனைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

அந்தப் போட்டியில் முகமது நவாஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி, 6 ரன்களும் எடுத்திருந்தார். மேலும், மே 1 ஆம் தேதி முதல் அவர் செய்த அனைத்து சாதனைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்திருக்கிறது.

Summary

Pakistan spin-bowling all-rounder Mohammad Nawaz has accepted a three-month period of ineligibility (which will be reduced to one month on completion of a substance of abuse treatment programme) for breaching the ICC Anti-Doping Code.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.