நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலிருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியதாக அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. அகமதாபாதில் நேற்று (மே 31) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், தங்கள் அணிகளை தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்த கேப்டன்களான மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா வரிசையில் ரஜத் படிதாரும் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாதரணமாக சாம்பியன் ஆகவில்லை எனவும், முதல் போட்டியிலிருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியதாகவும் அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், கடந்த ஐபிஎல் சீசனில் அதிக அளவிலான அழுத்தம் இருந்தது. இந்த சீசனில் மிகவும் அமைதியாக இருந்தோம். இந்த தொடர் முழுவதும் எந்த ஒரு அழுத்தமுமின்றி அமைதியாக விளையாடினோம். நாங்கள் வெறுமனே விளையாட மட்டும் இல்லை, இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்தினோம். இப்படியே விளையாடினால், கண்டிப்பாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுவிடுவோம் என்பதில் உறுதியாக இருந்தோம்.
ஆர்சிபி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பிறந்தநாள் பரிசாக நினைக்கிறேன். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
Summary
Royal Challengers Bangalore captain Rajat Patidar has stated that the team has dominated the current IPL tournament right from the very first match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது தெரியுமா?

ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பை வெல்வோம்: ரஜத் படிதார்

தோனி, ரோஹித் வரிசையில் இணைந்த ரஜத் படிதார்!

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |




