ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் இன்று (மே 27) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் விளையாடி வருகிறது.
கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.
களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர் மழையைப் பொழிந்தார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்தன. அனுபவம் வாய்ந்த பாட் கம்மின்ஸ் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார் சூர்யவன்ஷி.
அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து 3 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதுடன், அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையையும் தவறவிட்டார். இருப்பினும், ஐபிஎல் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ள கிறிஸ் கெயிலின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான கிறிஸ் கெயில் 59 சிக்ஸர்கள் விளாசியிருந்ததே ஐபிஎல் தொடர் ஒன்றில் வீரர் ஒருவர் விளாசிய அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. இந்த சாதனையை தற்போது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
ஐபிஎல் சீசன் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்
வைபவ் சூர்யவன்ஷி - 65* சிக்ஸர்கள் (2026)
கிறிஸ் கெயில் - 59 சிக்ஸர்கள் (2012)
ஆண்ட்ரே ரஸல் - 52 சிக்ஸர்கள் (2019)
கிறிஸ் கெயில் - 51 சிக்ஸர்கள் (2013)
ஜோஸ் பட்லர் - 45 சிக்ஸர்கள் (2022)
Summary
Vaibhav Suryavanshi has broken the record held by former West Indies player Chris Gayle for smashing the most sixes in the IPL series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











