பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்: கிளன் பிலிப்ஸ்

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து குஜராத் டைட்டன்ஸ் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் பேசியுள்ளார்.

News image

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் - படம் | குஜராத் டைட்டன்ஸ் (எக்ஸ்)

Updated On :27 மே 2026, 4:33 pm IST

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து குஜராத் டைட்டன்ஸ் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் நேற்று (மே 26) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி பெற்றது. மேலும், நேரடியாக இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்த நிலையில், இமாலய இலக்கை நோக்கி விளையாடுவதனால் ஏற்பட்ட அழுத்தமும், மோசமான ஃபீல்டிங்குமே குஜராத் டைட்டன்ஸ் அணியின் தோல்விக்கான காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

கிளன் பிலிப்ஸ்

கிளன் பிலிப்ஸ்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: 250 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது, எல்லா விஷயங்களும் அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். இமாலய இலக்கை துரத்தும்போது, அதிகப்படியான அழுத்தம் இருக்கும். சில அணிகள் மட்டுமே 250-க்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளன. எங்களால் முடிந்த அனைத்தையும் வெற்றிக்காக கொடுத்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இமாலய இலக்கை துரத்தும்போது, எல்லா விஷயங்களும் அணிக்கு சிறப்பாக அமைய வேண்டும். ஆனால், எங்களுக்கு அப்படி அமையவில்லை என்றார்.

குவாலிஃபையர் 1 போட்டியில் தோல்வியடைந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி, இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியை குவாலிஃபையர் 2 போட்டியில் நாளை மறுநாள் (மே 29) எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Gujarat Titans all-rounder Glenn Phillips has spoken about the reasons behind the team's defeat in Qualifier 1 against Royal Challengers Bangalore in the IPL tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.