சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ராஜஸ்தான் தோல்வியால் அழுகை: ரசிகர்களின் இதயங்களை வென்ற சூர்யவன்ஷி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து...

Rajasthan Royals' Vaibhav Sooryavanshi reacts after Gujarat Titans won against Rajasthan Royals during the Indian Premier League cricket match in New Chandigarh, India, Friday, May 29, 2026. (AP Photo/Ashwini Bhatia)

ராஜஸ்தான் அணியின் தோல்வியால் அழுத வைபவ் சூர்யவன்ஷி. - படம்: ஏபி, ஜியோ ஹாட்ஸ்டார்.

Updated On :

குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியுற்றதால், வைபவ் சூர்யவன்ஷி கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

நேற்றிரவு நடந்த குவாலிஃபயர் 2 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 214/6 ரன்கள் குவிக்க, குஜராத் டைட்டன்ஸ் 18.4 ஓவர்களில் 219/3 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த சீசனில் மொத்தமாக 776 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 237.31ஆகவும் சராசரி 48.50ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 72 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

இந்த சீசனில் 4 ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார். எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 ஆடத்தில் 97, 96 ரன்கள் குவித்து அணியை தனியாளாகத் தாங்கிப் பிடித்தார்.

போட்டிக்குப் பிறகு அழுதுகொண்டே வெளியேறிய சூர்யவன்ஷி டக் அவுட்டில் (வெளிப்புற ஓய்வறை) தொப்பியை வைத்து அழுதுகொண்டிருந்தார். இந்தக் காட்சிகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறாவிட்டாலும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வைபவ் சூர்யவன்ஷி வென்றுள்ளார்.

Summary

Weeping Over Rajasthan's Defeat: Sooryavanshi Wins Fans' Hearts!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.