இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பரிசாக கிடைத்த ஸ்மார்ட்போனை திடல் ஊழியருக்கு வழங்கிய கே.எல். ராகுல்!

தனக்குப் பரிசாக கிடைத்த ஸ்மார்ட்போனை கே.எல். ராகுல் திடலில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கு வழங்கியது குறித்து...

கே.எல். ராகுல், திடல் ஊழியர் - படம் - எக்ஸ்

Updated On :

தனக்குப் பரிசாக கிடைத்த ஸ்மார்ட்போனை திடலில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கு கே.எல். ராகுல் வழங்கினார்.

நியூசிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி, வெலிங்டன், எச்.என்.ஆர்.ஒய். விளையாட்டுத் திடலில் நேற்று (நவ. 7) நடைபெற்றது.

மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், டிஎல்எஸ் விதிமுறைப்படி, 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் 'கேம் சேஞ்சர் ஆஃப் தி மேட்ச்' என்னும் விருதுக்கான பரிசாக இந்திய வீரர் கே.எல். ராகுலுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டது. ஸ்மார்ட்போனை பரிசாகப் பெற்ற கே.எல். ராகுல் தனக்காக வைத்துக் கொள்ளாமல் அந்தத் திடலில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கினார்.

இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விடியோவாக வெளியிட்ட நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இதுகுறித்து அந்தப் பெண் ஊழியர், “தனக்குக் கிடைத்த போனை ராகுல் எனக்காகக் கொடுத்தார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவருடைய இந்த அன்பான செயலால் மிகவும் வியப்படைந்தேன்” என்று தெரிவித்ததும் பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

K.L. Rahul gifted the smartphone he had received as a present to a female staff member working at the ground.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.