மாட் ஹென்றி 6 விக்கெட்டுகள்..! 89 ரன்களுக்கு சுருண்ட இந்தியா; நியூசிலாந்து அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 244 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து குறித்து...

இந்திய அணி, நியூசிலாந்து அணி - AP
இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 333 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வில் யங் 125 ரன்கள் குவித்தார்.
அடுத்து விளையாடிய இந்திய அணி 26.4 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 27 ரன்கள் எடுத்தார்.
மூவர் (இஷான், அக்ஷர், நமன் திர்) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தார்கள். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் சொதப்பினார்கள்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஷ் ஐயர் ஒரே ஓவரில் டக் ஆகி அதிர்ச்சி அளித்தார்கள். நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 6 விக்கெட்டுகளை எடுத்து, ஆட்ட நாயகன் விருது வென்றார்.
தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி ஒருநாள் போட்டி நவ.15ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. தொடரை இந்தியா வெல்லுமா அல்லது நியூசிலாந்து சமன்செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
What a performance in Tauranga ð
— BLACKCAPS (@BLACKCAPS) November 13, 2026
Matt Henry with a career-best of 6/27 leads the BLACKCAPS to a 244 run win.
ð¸ @PhotosportNZ pic.twitter.com/rkQq4rEDMs
Summary
Matt Henry takes 6 wickets..! India bundled out for 89 runs; New Zealand won by 244 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


