தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

எம்.எஸ். தோனிக்கு பிரியாவிடை! சென்னை சேப்பாக்கம் திடலில் பிரம்மாண்ட டிரோன் ஷோ!!

சென்னை சேப்பாக்கம் திடலில் எம்.எஸ். தோனிக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக பிரம்மாண்ட டிரோன் ஷோ..

பிரம்மாண்ட டிரோன் ஷோ. - @ChennaiIPL

Updated On :

சென்னை சேப்பாக்கம் திடலில் எம்.எஸ். தோனிக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக பிரம்மாண்ட டிரோன் ஷோ நடத்தப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் நேற்று (நவ. 17) ஓய்வு பெற்றார். தோனி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமான போதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக விளையாடி வந்த மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும் அடுத்த ஐபிஎல்-2027 சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் திடலில் எம்.எஸ். தோனிக்குப் பிரியாவிடை அளிக்கும் விதமாகவும் அவரை கௌரவிக்கும் விதமாகவும் நேற்றிரவு (நவ. 18) நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் வானில் அவரது உருவப்படத்தை ஒளிரவிட்ட காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

நூற்றுக்கணக்கான டிரோன்கள் வானில் தோனியின் முகம், அவர் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட் மற்றும் ஸ்டம்பிங் செய்யும் காட்சிகள் ஒளிர விடப்பட்டன. மேலும், ‘தல’ என்ற பெயரும், அவரது ஜெர்சி ‘7’ என்ற எண்ணும் இடம்பெற்றன. ‘Thala Forever’ என்ற வாசகம் வானில் ஒளிர்ந்ததும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Summary

Five-time Indian Premier League (IPL) champions Chennai Super Kings (CSK) paid tribute to legendary MS Dhoni with a glittering drone show as he brought down curtains on his IPL career. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.