ஐபிஎல் மினி ஏலத்தில் சேவாக் மகன் ஆர்யவீர்!
ஐபிஎல் மினி ஏலத்தில் சேவாக் மகன் ஆர்யவீர் சேவாக் பற்றி...

வீரேந்திர சேவாக், ஆர்யவீர் சேவாக் - படங்கள்: பிடிஐ, பிசிசிஐ
ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் விண்ணப்பித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக யு19 இந்திய அணிக்காக விளையாடி வரும் முன்னாள் வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக், மோஹித் உல்வா உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தங்களின் அடிப்படை விலையாக ரூ. 30 லட்சத்தை நிர்ணயித்துள்ளனர்.
ஓமன் நாட்டில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய ஆர்யவீர் சேவாக், 95 ஸ்டிரைக் ரேட்டுடன் 361 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் 49 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதுடன், ஆட்ட நாயகன் விருதையும் வென்றவர் மோஹித் உல்வா.
இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் யு19 அணியின் கேப்டன் லக்ஷ்ய ராய்ச்சந்தானி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வாய் டிராவிட் ஆகியோர் பங்கேற்கவில்லை.
Summary
Sehwag's son Aaryavir Sehwag in the IPL mini-auction!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

