கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் போட்டியா?சீனாவில் டிரம்ப் - ஜின்பிங் - புதின் முத்தரப்பு சந்திப்பு தொடங்கியது!வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

ஆரம்பத்தில் விமர்சனங்கள், தற்போது மரியாதை; மகன் ஆர்யவீருக்கு சேவாக் பாராட்டு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியதால் மகன் ஆர்யவீர் மரியாதையை சம்பாதித்துள்ளதாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

Virender Sehwag, Aryavir Sehwag

வீரேந்திர சேவாக், ஆர்யவீர் சேவாக் - படங்கள்: பிடிஐ, பிசிசிஐ

Updated On :

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியதால் மகன் ஆர்யவீர் மரியாதையை சம்பாதித்துள்ளதாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றதுடன், இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

ஆசிய கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு 361 ரன்கள் குவித்த ஆர்யவீர் சேவாக் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 58 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார் ஆர்யவீர்.

இந்த நிலையில், ஆர்யவீர் அவரது துணைப் பெயரால் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்ததாகவும், ஆசிய கோப்பை தொடருக்குப் பிறகு அவர் மரியாதையை சம்பாதித்துள்ளதாகவும் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல ஆர்யவீர் சிறப்பான பங்களிப்பை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அணிக்காக அவரது பங்களிப்பை வழங்கியது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் வெறும் ரன்கள் மட்டும் எடுக்கவில்லை. பெரிய அளவில் ரன்களும் குவித்துள்ளார். இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உனக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால், நீ பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும் என நான் எப்போதும் ஆர்யவீருடன் பேசுவேன். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆர்யவீர் அதனை சாதித்துள்ளார். நீ நன்றாக விளையாடி பெரிய ரன்கள் குவிக்கும் வரை உன்னுடைய துணைப் பெயரால் மட்டுமே அறியப்படுவாய் என அவரிடம் கூறுவேன். ஆர்யவீர் அவரது துணைப் பெயரால் நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்திலும் இதுபோன்ற விமர்சனங்களை அவர் எதிர்கொள்ளலாம். ஆனால், ஆர்யவீரின் திறமை தற்போது அனைவருக்கும் தெரிகிறது. அவரால் நன்றாக விளையாட முடியும் என்பதை அனைவரும் பார்த்துள்ளார்கள். என்னைப் பொருத்தவரை, ஆர்யவீர் அவரது கிரிக்கெட் பயணத்தில் தேசத்தின் அன்பை மட்டுமே பெறுவார் என்றார்.

Summary

Virender Sehwag has stated that his son, Aryavir, has earned respect by performing well and contributing to his team's victory in the Asia Cup cricket tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.