இந்திய டி20 அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விடுவிப்பு... நமன் தீருக்கு வாய்ப்பு!
மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய டி20ஐ அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விடுவிக்கப்பட்டு நமன் தீர் சேர்க்கப்பட்டுள்ளதைப் பற்றி...

நமன் தீர் - வாஷிங்டன் சுந்தர்.
மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய டி20ஐ அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நமன் தீர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற சனிக்கிழமை (அக். 3) பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி உத்தரப்பிரதேசத்தின் லக்னௌவில் எக்கானா திடலில் அக். 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரர் நமன் தீர் சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணிவில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக நமன் தீர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. அதனை மையப்படுத்திய வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடும் விதமாக வருகிற அக். 11 ஆம் தேதி நடைபெறும் ரஞ்சி டிராபி தொடரில் வாஷிங்டன் சுந்தர் விளையாடவுள்ளார்.
இந்திய அணி விவரம்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், நிதிஷ், அர்ஷ்தீப் சிங், நமன் தீர், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ்.
Summary
Washington Sundar removed from India's T20I squad for West Indies series, Naman Dhir named replacement
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





