
ரோஹித் சர்மா அவரது வயதைவிட அதிக சதங்கள் விளாசுவதை விரும்பும் முன்னாள் இந்திய கேப்டன்!
ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா அவரது வயதைக் காட்டிலும் அதிக சதங்கள் விளாசுவதை விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா அவரது வயதைக் காட்டிலும் அதிக சதங்கள் விளாசுவதை விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. நியூ சண்டீகரில் நேற்று (அக்டோபர் 3) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். அவர் 129 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார்.

சுனில் கவாஸ்கர்
இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா அவரது வயதைக் காட்டிலும் அதிக சதங்கள் விளாசுவதை விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டதால் ஏமாற்றமடைந்தேன். அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடலாம். அவர் ஓய்வு பெறும்போது, அவரது வயதைக் காட்டிலும் அதிக சதங்கள் விளாசியிருக்க வேண்டும் என்பதை தனிப்பட்ட முறையில் நான் விரும்புகிறேன்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசியிருந்தால், அவர் 36 சதங்களை நிறைவு செய்திருப்பார். என்னைப் பொருத்தவரை, வீரர் ஒருவர் ஓய்வு பெறும்போது அவரது வயதைக் காட்டிலும் அதிக சதங்கள் விளாசியிருப்பது சிறப்பான விஷயம். அதனால், ரோஹித் சர்மா அவரது வயதைக் காட்டிலும் அதிக சதங்கள் விளாச வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
39 வயதாகும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian captain Sunil Gavaskar has stated that he would like to see Rohit Sharma score more centuries in One Day Internationals than his age.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






