கடைசி டி20: அரைசதம் விளாசிய ஷாகிப்ஸதா ஃபர்ஹான்; இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.

ஷாகிப்ஸதா ஃபர்ஹான் - படம் | AP
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ராவல்பிண்டியில் இன்று (அக்டோபர் 13) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது.
ஷாகிப்ஸதா ஃபர்ஹான் அரைசதம்!
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப்ஸதா ஃபர்ஹான் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 47 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அராஃபாத் மின்ஹாஸ் 34* ரன்கள், ஹாசன் நவாஸ் 16 ரன்கள், அப்துல் சமத் 15 ரன்கள் மற்றும் ஃபகர் ஸமான் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை தரப்பில் தாசுன் ஷானகா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நுவான் துஷாரா மற்றும் எஷான் மலிங்கா தலா இரண்டு விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.
Summary
Batting first in the final T20 match against Sri Lanka, the Pakistan team scored 168 runs for the loss of 8 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


