மும்பை இந்தியன்ஸ்: தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜெயவர்தனே விலகல்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜெயவர்தனே விலகியது குறித்து...

மஹிலா ஜெயவர்தனே - படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மஹிலா ஜெயவர்தனே விலகியுள்ளார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. அதில் 3 கோப்பைகளுக்கு (2017, 2019, 2020) ஜெயவர்தனே தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.
முன்னதாக 2017-2022 வரை மும்பை அணியில் இருந்தார். பின்னர், கடைசியாக 2025 சீசனில் மீண்டும் மும்பை அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜெயவர்தனே தற்போது, 49 வயதில் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெளிநாட்டு லீக்குகளிலும் இவர்தான் பயிற்சியாளராக இருந்துவந்தார். 2025 சீசனில் குவாலிஃபயர் 2ல் தோற்றது. கடந்த 2026ல் ஒன்பதாவது இடத்தில் முடித்தது.
ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்கள் குறித்த முடிவுகள் நவ.15ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மினி ஏலம் வரும் டிசம்பரில் கோவாவில் நடைபெற இருக்கிறது. புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ð ððºð¯ð®ð¶ ðð»ð±ð¶ð®ð»ð ðð¶ð± ð® ðð²ð®ð¿ðð³ð²ð¹ð ðð®ð¿ð²ðð²ð¹ð¹ ðð¼ ð ð®ðµð²ð¹ð® ðð®ðð®ðð®ð¿ð±ð²ð»ð²
— Mumbai Indians (@mipaltan) October 17, 2026
Mahela has been much more than a Head Coach to Mumbai Indians. Under his leadership as Head Coach, Mumbai Indians won 3 IPL titles.
Read more ð⦠pic.twitter.com/qWLyWbxSYW
Summary
Mahela Jayawardene steps down as Mumbai Indians head coach
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


