காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

4-வது டி20: சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்; இந்தியாவுக்கு 260 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

Glenn Phillips, overjoyed after hitting a century

சதம் விளாசிய மகிழ்ச்சியில் கிளன் பிலிப்ஸ் - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்!

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளன் பிலிப்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 49 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ஃபின் ஆலன் 31 ரன்கள், டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், அக்‌ஷர் படேல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

Summary

In the fourth T20 match against India, New Zealand batted first and scored 259 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.