FOLLOW US

ON GOOGLE DISCOVER

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

துலீப் கோப்பை: முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் ஈஸ்ட் ஸோன் அணி!

துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடி வரும் ஈஸ்ட் ஸோன் அணி உணவு இடைவேளையின்போது, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.

படம் | தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (எக்ஸ்)

Published On :6 செப்டம்பர் 2026, 12:51 pm IST

துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடி வரும் ஈஸ்ட் ஸோன் அணி உணவு இடைவேளையின்போது, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.

துலீப் கோப்பை இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (செப்டம்பர் 6) தொடங்கியது. ஈஸ்ட் ஸோன் மற்றும் சௌத் ஸோன் இடையேயான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஈஸ்ட் ஸோன் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

அபிமன்யு ஈஸ்வரன் அரைசதம்!

டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஈஸ்ட் ஸோன் அணி உணவு இடைவேளையின்போது, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 86 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ஷிகார் மோகன் 16 ரன்களுடனும், சுதிப் குமார் 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Summary

Batting first in the Duleep Trophy final, the East Zone team has scored 133 runs for the loss of two wickets by the lunch break.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.