தனியார்மயமாகும் பிக் பாஷ் லீக்! கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்புதல்!

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கை தனியார்மயப்படுத்தும் அறிவிப்பு பற்றி...

Cricket Australia

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இலச்சினை. - படம்: எக்ஸ் / கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

Published On :8 செப்டம்பர் 2026, 11:00 am IST

பிக் பாஷ் லீக்கை (பிபிஎல்) தனியார்மயமாக்குவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரைப் போன்று பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பிபிஎல் தொடரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்தி வருகின்றது. மொத்தம் எட்டு நகரங்களை மையமாகக் கொண்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், பிக் பாஷ் லீக்கில் தனியார் முதலீடு மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவை ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஒரு விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. கடந்த ஓராண்டாக இந்த விவாதங்கள் தீவிரமடைந்த நிலையில், தனியார்மயமாக்கலுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் கட்டமாக, மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியை விற்பனை செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2027-28 சீசன் முதல் ரெனிகேட்ஸ் அணி, புதிய உரிமையாளரின் கீழ் செயல்படும் வகையில், அதற்கான ஏலங்களை தனியார் உரிமையாளர்களிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கோரியுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் அனுபவம் மூலம் பிற அணிகளையும் விற்பனைக்குக் கொண்டு வருவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பிற நாடுகளின் லீக் தொடர்களில் காணப்படுவது போல தனியார் நிறுவனங்கள் பிபிஎல்-லில் முதலீடு செய்யவுள்ளன. ஐபிஎல் அணி உரிமையாளர்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள வணிக நிறுவனங்கள் பிபிஎல்-லில் முதலீடு செய்யக்கூடும்.

Summary

Big Bash League set for privatization! Cricket Australia gives approval!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.