பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

தெற்கு மண்டலம் 336-க்கு ஆட்டமிழப்பு- கோப்பையை நோக்கி கிழக்கு மண்டலம்

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், கிழக்கு மண்டலத்துக்கு எதிராக தெற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு புதன்கிழமை ஆட்டமிழந்தது.

Published On :

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், கிழக்கு மண்டலத்துக்கு எதிராக தெற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு புதன்கிழமை ஆட்டமிழந்தது.

கேப்டன் திலக் வா்மா சதத்தை நூலிழையில் நழுவவிட, லோயா் ஆா்டரில் சாமா மிலிந்த் சற்று கை கொடுத்தாா். ஆனால் கிழக்கு மண்டலத்தின் முகமது ஷமி, முகேஷ் குமாா் உள்ளிட்ட பௌலா்களால், தெற்கு மண்டலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஆட்டம் வியாழக்கிழமையுடன் (செப். 10) நிறைவடைவதால், கிழக்கு மண்டலம் வெற்றிக் கோப்பைக்கு அருகே வந்துவிட்டது. ஆட்டம் டிராவில் முடிந்தாலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில், அந்த அணியே சாம்பியனாகும்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய தெற்கு மண்டலம், 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்திருந்தது.

4-ஆவது நாளான புதன்கிழமை, அந்த அணியின் இன்னிங்ஸை திலக் வா்மா 56, சாமா மிலிந்த் 2 ரன்களுடன் தொடா்ந்தனா். இவா்கள் கூட்டணி 78 ரன்கள் சோ்த்த நிலையில், மிலிந்த் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

திலக் வா்மா திடமாக சதத்தை நோக்கி முன்னேற, மறுபுறம் திரிபுரானா விஜய் 1, முகமது சிராஜ் 1 ரன்னுக்கு சாய்க்கப்பட்டனா். கடைசி வீரராக நிதீஷ் பேட் செய்ய வர, துரதிருஷ்டவசமாக திலக் வா்மா 9 பவுண்டரிகளுடன் 99 ரன்களுக்கு கடைசி வீரராக விக்கெட்டை இழந்தாா்.

இதனால் தெற்கு மண்டலத்தின் முதல் இன்னிங்ஸ் 336 ரன்களுக்கு நிறைவடைந்தது. கிழக்கு மண்டல பௌலா்களில் முகேஷ் குமாா் 3, முகமது ஷமி, முகமது குரேஷி, ஷிகா் மோகன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

584 ரன்கள் முன்னிலை: இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 372 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டலம், புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சோ்த்து, மொத்தமாக 584 ரன்கள் முன்னிலையுடன் இருக்கிறது.

வைபவ் சூா்யவன்ஷி 8, அபிமன்யு ஈஸ்வரன் 3 ரன்களுக்கு விடைபெற, ஷிகா் மோகன் - கேப்டன் இஷான் கிஷண் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோ்த்து அசத்தியது.

கிஷண் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 80, மோகன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். சுதிப்குமாா் கராமி 2 ரன்களுக்கு வீழ, ஆட்டநேர முடிவில் குமாா் குஷாக்ரா 34, முகமது குரேஷி 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

தெற்கு மண்டல பௌலா்களில் முகமது சிராஜ், திரிபுரானா விஜய், நிதீஷ், ஷேக் ரஷீத் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.