சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

முகமது ஷமி, முகேஷ் குமார் பந்துவீச்சில் அசத்தல்; தெற்கு மண்டலம் 242 ரன்கள் குவிப்பு!

துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் தெற்கு மண்டலம் அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.

Mohammed Shami

முகமது ஷமி (கோப்புப் படம்)

Published On :8 செப்டம்பர் 2026, 6:13 pm IST

துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் தெற்கு மண்டலம் அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, தெற்கு மண்டலம் அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தெற்கு மண்டலம் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் திலக் வர்மா அரைசதம் கடந்து அசத்தினர். தேவ்தத் படிக்கல் 104 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.

நாராயண் ஜெகதீசன் 32 ரன்கள், ஷேக் ரஷீத் 27 ரன்கள், சமரன் ரவிச்சந்திரன் 23 ரன்கள், ஷ்ரேயாஸ் கோபால் 26 ரன்கள் எடுத்தனர். கேப்டன் திலக் வர்மா 56 ரன்களுடனும், சமா வி மிலிண்ட் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கிழக்கு மண்டலம் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். முகமது குரேஷி மற்றும் ஷிகார் மோகன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தெற்கு மண்டலம் அணி கிழக்கு மண்டலம் அணியைக் காட்டிலும் 466 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In the Duleep Trophy final, the South Zone team has scored 242 runs for the loss of 6 wickets in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.