
ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது!
பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தது குறித்து...

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது - AFP
பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது (28 வயது) ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் சமீபத்தில் பெரிதாக சோபிக்காததால் அவர் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். இதனால், அபரார் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதுவரை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஐவர் மட்டுமே டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்கள். உமர் குல், சயீத் அஜ்மல், இமாத் வாசிம், ஷாஹித் அஃப்ரிடி வரிசையில் அப்ரார் அகமதும் இணைந்துள்ளார்.
அப்ரார் அகமது பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 10 டெஸ்ட், 19 ஒருநாள், 38 டி20 போட்டிகள் விளையாடி 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
குறிப்பாக டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் 6.67 எகானமியுடன் பந்துவீசியுள்ளளார். ஒருநாள் தரவரிசையிலும் இவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக ஆஸ்திரேலியாவுடான சொந்த மண்ணில் விளையாடிய டி20 தொடரில் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இது குறித்து அப்ரார் அகமது, ”பாகிஸ்தான் அணியை பிரதிநிதித்துவம் படுத்தி விளையாடி உலகின் நம்.1 வீராரக மாறுவது கனவு நனவான தருணம். இன்னும் கடினமாக உழைத்து பாகிஸ்தானுக்கு கூடுதல் வெற்றிகளைப் பெற்றுத் தருவேன். பாகிஸ்தானுக்கு தங்கம் வெல்வதே எனது இலக்கு” எனக் கூறியுள்ளார்.
Summary
Pakistan's Abrar Ahmed claims the top spot in T20 rankings!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







