
ஐசிசி தரவரிசையில் 2ஆவது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி!
இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது குறித்து...

சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி - படம்: எக்ஸ் / பிசிசிஐ
இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இந்தப் பிரிவில் இந்தியாவின் கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். விராட் கோலி மூன்றாவதில் இருந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் குவித்து மிரட்டினார். இந்த சதத்துடன் விராட் கோலி பேட்டிங் தரவரிசையில் மூன்றாவதில் இருந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தற்போது, இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இதிலும் விராட் கோலி சதம் அடித்து, ஷுப்மன் கில் டக் அவுட் ஆனால், விராட் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை
1. ஷுப்மன் கில் - 816 புள்ளிகள்
2. விராட் கோலி - 796 புள்ளிகள்
3. டேரில் மிட்செல் - 794 புள்ளிகள்
4. ரோஹித் சர்மா - 753 புள்ளிகள்
5. இப்ரஹிம் ஸர்தான் - 719 புள்ளிகள்
Summary
Virat Kohli climbs to second in latest ICC ODI batting rankings
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







