கடைசி ஓவர்களில் தோனி அதிரடி ஆட்டம்: 160 ரன்கள் எடுத்த சிஎஸ்கே!
சென்னையில் நடைபெற்று வரும் பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது...


சென்னையில் நடைபெற்று வரும் பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் மூன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிராவோ, மோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர் ஆகியோருக்குப் பதிலாக ஸ்காட் குக்ஜெலெஜின், டு பிளெஸ்ஸிஸ், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில், ஆண்ட்ரூ டை ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
தொடக்க வீரர்களாக வாட்சனும் டு பிளெஸ்ஸிஸும் களமிறங்கினார்கள். ஷமி வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார் டு பிளெஸ்ஸிஸ். அந்த ஓவரில் சிஎஸ்கேவுக்கு 16 ரன்கள் கிடைத்தன. அடுத்ததாக ஆண்ட்ரூ டை வீசிய 5-வது ஓவரில் சிஎஸ்கேவுக்கு 18 ரன்கள் கிடைத்தன. வாட்சனும் டு பிளெஸ்ஸிஸும் தலா 1 சிக்ஸர் அடித்தார்கள். இதனால் பவர்பிளேயில் சிஎஸ்கேவுக்கு விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் கிடைத்தன. பிறகு வாட்சன் 26 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. நல்ல தொடக்கம் கிடைத்ததால் சிஎஸ்கே அதிக ரன்களை எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதன்பிறகு டு பிளெஸ்ஸிஸும் ரெய்னாவும் விரைவாக ரன்கள் குவிக்க முயன்றார்கள். கடைசியில் இருவருமே அஸ்வின் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தார்கள். டு பிளெஸ்ஸிஸ் 38 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் ரெய்னா 17 ரன்களுடனும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு தோனியும் ராயுடுவும் ஒன்று சேர்ந்தார்கள். இவர்களால் சில ஓவர்களில் விரைவாக ரன்கள் எடுக்க முடியாத நிலை இருந்தது. எனினும் கடைசி 3 ஓவர்களில் தோனி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டை வீசிய 18-வது ஓவரில் 11 ரன்களும் சாம் கரண் வீசிய 19-வது ஓவரில் 19 ரன்களும் சென்னை அணிக்குக் கிடைத்தன. ஷமி வீசிய 20-வது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன. தோனியின் அதிரடி ஆட்டத்தால் கடைசி 3 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்ததால் சிஎஸ்கேவுக்குக் கெளரவமான ஸ்கோர் கிடைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. தோனி 23 பந்துகளில் 37 ரன்களும் ராயுடு 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...