தனி ஆளாக பஞ்சாபிடமிருந்து வெற்றியைப் பறித்த பொலார்ட்: சிக்ஸர் மழை விடியோ!
கடைசி 10 ஓவர்களில் மும்பை அணி வெற்றி பெற 133 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் மழை பொழிந்து தன் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்...


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் அடித்து "த்ரில்' வெற்றி கண்டது. அந்த அணி வீரர் பொலார்டு 31 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
கடைசி 10 ஓவர்களில் மும்பை அணி வெற்றி பெற 133 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் மழை பொழிந்து தன் அணிக்கு வெற்றி தேடித்தந்தார் பொலார்ட். ஐபிஎல்லில் இலக்கை விரட்டிய அணிகளில் எந்தவொரு அணியும் கடைசி 10 ஓவர்களில் 126 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்றதில்லை. இதனால் நேற்று புதிய சாதனையைப் படைத்தது மும்பை அணி.
மேலும் மே 2017 முதல் ஐபிஎல்-லில் முதல்முறையாக 30-க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டுள்ளார் பொலார்ட். முதல் 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த பொலார்ட் அடுத்தப் பத்து பந்துகளில் 24 ரன்களில் எடுத்தார். அடுத்தப் பதினோரு பந்துகளில் ருத்ரதாண்டவம் ஆடினார். அதில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் குவித்தார். நேற்றைய ஆட்டத்தில் அவருடைய ஸ்டிரைக் ரேட் - 267.74.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...