ரிஷப் பந்த் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளிலாவது விளையாடுவார்: ரிக்கி பாண்டிங் நம்பிக்கை!
உலகக் கோப்பைப் போட்டிக்கு ரிஷப் பந்த் தேர்வாகாதது குறித்து தில்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது...


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் அறிவித்தது பிசிசிஐ. 2015 உலகக் கோப்பையில் இடம்பெற்ற தோனி, தவன், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி, ரோஹித் சர்மா ஆகிய 7 வீரர்களுக்கு இந்தமுறையும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரு தமிழ்நாட்டு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மேலும், 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத ரிஷப் பந்த், ராயுடு, வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆகிய மூன்று வீரர்களும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். முதலில் அறிவிக்கப்பட்ட 15 பேரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், இந்த மூவரிலிருந்து ஒருவர் அணியில் நுழைக்கப்படுவார்.
இந்நிலையில், உலகக் கோப்பைப் போட்டிக்கு ரிஷப் பந்த் தேர்வாகாதது குறித்து தில்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்படாததற்கு நான் ஆச்சர்யப்படுகிறேன். இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங் பலமாக உள்ளதால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவருடைய திறமைகளை அறிந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், ரிஷப் பந்த் தன் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவதற்குள் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளிலாவது விளையாடவில்லையென்றால் நான் ஆச்சர்யப்படுவேன் என்றார்.
மேலும் கூறியதாவது: அவர் பொறுமையின்றி விளையாடி விக்கெட்டுகளை இழப்பதில்லை. அவர் மிகவும் புத்திசாலித்தனமான வீரர். அவர் சூழலை நன்குப் புரிந்துகொண்டு விளையாடுகிறார். அவரைத் தேர்வு செய்யாததற்குக் காரணங்கள் இருக்கலாம். அதை நான் விமரிசிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...