ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

ஐபிஎல்: சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள்!

சிஎஸ்கே அணியில் டுபிளெசிஸ், சாம் கரண், ருதுராஜ் போன்றோர் சிறப்பாக விளையாடினார்கள்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:35 am

DIN

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் சென்னை சூப்பா் கிங்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 18.5 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வென்றது. சென்னையை வெற்றிக்கு வழிநடத்திய ருதுராஜ் கெய்க்வாட், ஆட்டநாயகன் ஆனாா்.

மும்முறை சாம்பியனான சென்னை ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃபுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது இது முதல்முறையாகும். மறுபுறம், சென்னையிடம் தோல்வி கண்ட பஞ்சாபும் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்றுக்கான போட்டியில் இருந்திருக்க இயலும்.

சிஎஸ்கே அணியில் டுபிளெசிஸ், சாம் கரண், ருதுராஜ் போன்றோர் சிறப்பாக விளையாடினார்கள். அவற்றின் விவரங்கள்:

அதிக ரன்கள்

1. டு பிளெசிஸ் - 449 ரன்கள் (13 ஆட்டங்கள்)
2. ராயுடு - 359 ரன்கள் (12 ஆட்டங்கள்)
3. ஷேன் வாட்சன் - 299 ரன்கள் (11 ஆட்டங்கள்)
4. ஜடேஜா - 232 ரன்கள் (14 ஆட்டங்கள்)
5. ருதுராஜ் - 204 ரன்கள் (6 ஆட்டங்கள்)

அதிக சிக்ஸர்கள்

1. டு பிளெசிஸ் - 14
2. ஷேன் வாட்சன் - 13
3. ராயுடு - 12
4. சாம் கரண் - 12
5. ஜடேஜா - 11

அதிக அரை சதங்கள்

1. டு பிளெசிஸ் - 4
2. ருதுராஜ் - 3
3. ஷேன் வாட்சன் - 2

அதிக ஸ்டிரைக் ரேட் (குறைந்தது 5 ஆட்டங்கள்)

1. ஜடேஜா - 171.85
2. டு பிளெசிஸ் - 140.75
3. சாம் கரண் - 131.91

அதிக விக்கெட்டுகள்

1. சாம் கரண் - 13 (14 ஆட்டங்கள்)
2. தீபக் சஹார் - 12 (14 ஆட்டங்கள்)
3. ஷர்துல் தாக்குர் - 10 (9 ஆட்டங்கள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.