நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காயம் இந்தளவுக்குத் தீவிரமாகும் என எதிர்பார்க்கவில்லை: ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய மிஸ்ரா

ஓரிரு ஆட்டங்களில் மட்டும் தான் விளையாட முடியாமல் போகும் என நினைத்தேன்...

News image
Updated On :6 அக்டோபர் 2020, 9:53 am

DIN

ஐபிஎல் போட்டியிலிருந்து தில்லி கேபிடல்ஸ் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா விலகியுள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை, அபுதாபி, ஷாா்ஜா ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி நவம்பா் 10 அன்று நிறைவுபெறுகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து காயம் காரணமாக தில்லி கேபிடல்ஸ் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா விலகியுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிதிஷ் ராணா கொடுத்த கேட்சைத் தனது பந்துவீச்சின் போது பிடிக்க முயன்றார் மிஸ்ரா. அப்போது அவருடைய விரல்களில் காயம் ஏற்பட்டது.

37 வயது மிஸ்ரா, இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்று ஆட்டங்களில் 0/23, 2/35, 1/14 எனச் சிறப்பாகப் பந்துவீசியதால் இவருடைய விலகல் தில்லி அணிக்குப் பின்னடைவாக இருக்கப் போகிறது.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மிஸ்ரா கூறியதாவது:

இந்தக் காயம் இவ்வளவு தீவிரமாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஓரிரு ஆட்டங்களில் மட்டும் தான் விளையாட முடியாமல் போகும் என நினைத்தேன். இருந்தாலும் இந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும். கேட்ச் பிடிக்கச் சென்றபோதுதான் காயம் ஏற்பட்டது. உடற்தகுதி காரணமாக உண்டான காயம் அல்ல என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.