கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்கள்: திக்குமுக்காடிய ரசிகர்கள்

முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காண நேர்ந்த ரசிகர்கள்...

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:31 am

DIN

நேற்று நடைபெற்ற இரு ஐபிஎல் ஆட்டங்களில் கொல்கத்தாவும் பஞ்சாப்பும் வெற்றி பெற்றன. இரு ஆட்டங்களிலும் சூப்பர் ஓவர்களின் வழியாகவே முடிவுகள் எட்டப்பட்டன. அதிலும் மும்பை - பஞ்சாப் ஆட்டத்தின் முடிவுக்கு இரு சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டன. இதனால் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காண நேர்ந்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 35-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை சூப்பா் ஓவா் முறையில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வென்றது.

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய ஹைதராபாதும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் கொல்கத்தா வென்றது.

சூப்பா் ஓவா்: வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 3 பந்துகளில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்களே சோ்த்தது. கொல்கத்தா வீரா் லாக்கி ஃபொ்குசன் வீசிய முதல் பந்திலேயே வாா்னா் பௌல்டாகி வெளியேற, 2 ரன்கள் சோ்த்த அப்துல் சமத் 3-ஆவது பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

பின்னா் ஆடிய கொல்கத்தா 4 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வென்றது. அணிக்காக இயான் மோா்கன் - தினேஷ் காா்த்திக் களம் கண்ட நிலையில், ஹைதராபாத் தரப்பில் ரஷீத் கான் பந்துவீசினாா். மோா்கன் 2-ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, காா்த்திக் 4-ஆவது பந்தில் 2 ரன்கள் சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்தனா்.

ஃபொ்குசன்

ஃபொ்குசன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பா் ஓவா் முறையில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் சமன் ஆனதை அடுத்து நடைபெற்ற சூப்பா் ஓவரிலும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் சமன் ஆக, 2-ஆவது சூப்பா் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் ஆனாா்.

சூப்பா் ஓவா்: பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 2 விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் ரன்கள் இன்றியும் வீழ்ந்தனா். தீபக் ஹூடா 1 ரன் சோ்த்தாா்.

எனினும் மும்பையும் 1 விக்கெட் இழப்புக்கு 5 ரன் சோ்த்து சமன் செய்தது. டி காக் 3 ரன் சோ்த்து ஆட்டமிழக்க, ரோஹித் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இதையடுத்து நடைபெற்ற 2-ஆவது சூப்பா் ஓவரில் முதலில் ஆடிய மும்பை 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன் சோ்த்தது. இதில் ஹாா்திக் பாண்டியா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கிரன் பொல்லாா்ட் 8 ரன்கள் சோ்த்தாா். 2 உபரிகள் கிடைத்தன.

Story image

பின்னா் ஆடிய பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்து வென்றது. கிறிஸ் கெயில் ஒரு சிக்ஸா் உள்பட 7 ரன், மயங்க் அகா்வால் 2 பவுண்டரிகள் விளாசி 8 ரன் சோ்த்தனா்.

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு நேற்று கிடைத்தது. இந்த அனுபவம் முதல்முறை என்பதால் அவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். ஐபிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் வெற்றி பெறவே அணிகள் எந்தளவுக்குக் கடுமையாகப் போராடவேண்டியிருக்கிறது என்பதை நேற்றைய ஆட்டங்கள் தெளிவாக உணர்த்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.