ஐபிஎல்-இல் ஷமிதான் சிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர்: மேக்ஸ்வெல்
நடப்பு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் முகமது ஷமிதான் சிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர் என அணியின் சக வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.


நடப்பு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் முகமது ஷமிதான் சிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர் என அணியின் சக வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான நேற்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக பெறும் 3-வது வெற்றி.
இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில் மேக்ஸ்வெல் தெரிவித்ததாவது:
"ஆட்டத்தைக் கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்லாதது நல்லது. 6 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே வெற்றி இலக்கை அடைந்துள்ளோம். இது ஒட்டுமொத்த அணிக்குமே பெரிய விஷயம். தொடர்ச்சியாக 3 வெற்றிகள் பெற்றிருப்பது நல்ல உணர்வைத் தருகிறது.
நாங்கள் சரியான நேரத்தில் வேகமெடுத்துள்ளோம். இதே நிலையில் நீடிப்போம் என்று நம்புகிறோம்.
தற்போதைய நிலையில் இந்த சீசனில் ஷமிதான் சிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர். அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் சிறப்பாக செயல்படுத்துவது பெரிய விஷயம். மும்பைக்கு எதிரான சூப்பர் ஓவர் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியதை நாம் அனைவருமே பார்த்தோம்.
சரியான இலக்கு என்று நாங்கள் கணிக்கும் இலக்கைக் காட்டிலும் 10, 15 ரன்களுக்குக் குறைவாகவே கட்டுப்படுத்துகிறார். எங்களுக்கு மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு தலை வணங்குகிறேன்."
முன்னதாக, மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சூப்பர் ஓவரில் 6 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய எதிரணியை 5 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி அசத்தினார் ஷமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...