குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

எதிர்பார்க்காத வாய்ப்பு இது: இந்திய அணிக்குத் தேர்வான தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி

என்னிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது எனக்குப் பெரிய விஷயம்.

News image
Updated On :27 அக்டோபர் 2020, 6:19 am

DIN

டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடைப்பகுதி தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மா இதில் எந்தவொரு தொடரிலும் பங்கேற்கவில்லை. 

ஒருநாள், டி20 அணிகளின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியிலும் ராகுலுக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்த வாய்ப்பு பற்றி வருண் சக்ரவர்த்தி ஒரு பேட்டியில் கூறியதாவது:

என்னிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது எனக்குப் பெரிய விஷயம். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு தான் இந்த விஷயம் எனக்குத் தெரிந்தது. நம்பமுடியாமல் இருந்தது. கேகேஆர் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவதுதான் என்னுடைய இலக்காக இருந்தது. அந்த அணிக்காக நிறைய வெற்றிகளைத் தரவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாடுவேன் என நம்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த தேர்வுக்குழுவினருக்கு நன்றி என்றார்.

இந்தச் சுற்றுப்பயணத்தின்போது இளம் வீரர்களான டி.நடராஜன், கமலேஷ் நாகர்கோடி, கார்த்திக் தியாகி, இஷான் பொரேல் ஆகியோர் வலைப் பயிற்சிக்காகப் பந்துவீச இருப்பதாகவும், பிரதான பந்துவீச்சாளர்களுக்குக் காயம் ஏற்படும் பட்சத்தில் இவர்கள் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.