இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

4-வது முறையாக கோப்பை வெல்லுங்கள் சிஎஸ்கே: வாட்சன் வாழ்த்து

14-வது ஐபிஎல் சீசனில் முதல் ஆட்டத்தில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
படம்: வாட்சன் | பேஸ்புக்
Updated On :10 ஏப்ரல் 2021, 1:22 pm

DIN


14-வது ஐபிஎல் சீசனில் முதல் ஆட்டத்தில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் சீசனின் 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (சனிக்கிழமை) மோதுகின்றன. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறை பலம் வாய்ந்த அணியாக வெற்றி முனைப்பில் களமிறங்குகிறது.

இந்த நிலையில், முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் வாட்சன் பதிவிட்டுள்ளது:

"இந்த சீசனின் முதல் ஆட்டத்துக்கு வாழ்த்துகள். 4-வது முறையாக ஐபிஎல் பட்டத்தை பெறுங்கள். விசில் போடு"

கடந்த ஐபிஎல் சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பிரதான வீரராக ஷேன் வாட்சன் இருந்தார். கடந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.