ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஐபிஎல்: சென்னையைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தில் ஆர்சிபி!

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 5:17 am

DIN

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றது.

இதன்மூலம் நடப்பு சீசனில் இதுவரை தோல்வியே இல்லாத அணியாக பெங்களூா் வெற்றி நடை போடுகிறது. ராஜஸ்தானுக்கு இது 3-வது தோல்வி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூா் 16.3 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வென்றது. சதம் விளாசிய பெங்களூா் வீரா் தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சென்னை அணி 2-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ராஜஸ்தான் அணி கடைசி இடத்துக்கு இறங்கியுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. பெங்களூர் 4 4 0 8 +1.009
 2. சென்னை 4 3 1 6 +1.142
 3. தில்லி 4 3 1 6 +0.426
 4. மும்பை 4 2 2 4 +0.187
 5. ஹைதராபாத்  4 1 3 2 -0.228
 6. கொல்கத்தா  4 1 3 2 -0.700
 7. பஞ்சாப் 4 1 3 2 -0.824
 8. ராஜஸ்தான் 4 1 3 2 -1.011

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.