ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 4:12 pm

DIN

பஞ்சாப் அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்களும், ஜோர்டான் 30 ரன்களையும் எடுத்தனர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 21-வது ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா களம் கண்டுள்ளது.

இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயோன் மோர்கன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

கேப்டன் கே.எல். ராகுல் 19 ரன்களில் வெளியேற அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  கிறிஸ் கெய்ல் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்களும், ஜோர்டான் 30 ரன்களையும் எடுத்தனர்.

முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.