பஞ்சாபிற்கு எதிரான போட்டி: கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.


ஐபிஎல் டி-20 இன்றைய கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயோன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
இரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், கொல்கத்தா 1 வெற்றியும், பஞ்சாப் 2 வெற்றியும் பெற்றுள்ளன.
கொல்கத்தாவைப் பொருத்தவரை முதல் ஆட்டத்தில் மட்டும் வென்ற நிலையில், அடுத்த 4 ஆட்டங்களிலும் தொடா்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. முற்றிலுமாக சரிவைச் சந்தித்துள்ள அந்த அணியின் பேட்டிங் வரிசை மீண்டால் மட்டுமே கொல்கத்தாவுக்கு வெற்றிகள் வசமாகும்.
பஞ்சாபை பொருத்தவரை தொடா் தோல்வியிலிருந்து மீண்டு கடைசி ஆட்டத்தில் வென்றுள்ளது. எனவே இந்த ஆட்டத்திலும் வென்று உத்வேகத்தை தக்க வைக்க அந்த அணி முயற்சிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...