ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் அனுப்ப வேண்டும்: கிறிஸ் லின்

ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் அனுப்ப வேண்டும்...

News image
ஆஸி. வீரர் கம்மின்ஸ்
Updated On :27 ஏப்ரல் 2021, 9:35 am

DIN

ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் அனுப்ப வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் கிறிஸ் லின் கூறியுள்ளார்.

ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா ஆகிய மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். 

இந்தியப் பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் தங்கள் நாட்டை தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. மே 15 வரை இந்தத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் மே 23 அன்று முடிகிறது. ஐபிஎல் போட்டி மே 30 அன்று நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் அனுப்ப வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் கிறிஸ் லின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

ஆஸி. வீரர்களின் ஒவ்வொரு ஐபிஎல் ஒப்பந்தத்தில் இருந்தும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு 10% பெறுகிறது. இந்த வருடம் அந்தத் தொகையைத் தனி விமானத்துக்குச் செலவழிக்கலாமா என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

நாங்கள் மிகவும் கட்டுப்பாடான கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறோம். அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவுள்ளோம். எனவே நாங்கள் நாடு திரும்ப ஆஸி. அரசு தனி விமானம் அனுப்பும் என நம்புகிறோம். நிலைமையை அறிந்துதான் ஒப்பந்தம் செய்துள்ளோம். போட்டி முடிந்தபிறகு பாதுகாப்பாக நாங்கள் சொந்த நாட்டுக்குச் செல்லவேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.