ஆர்சிபி அணியைத் தோற்கடித்து புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!
இந்த வெற்றியினால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.


ஐபிஎல் போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வருடம் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிறகு விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் - கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கே வழங்கப்பட்டது.
இந்த வெற்றியினால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
புள்ளிகள் பட்டியல்
| வரிசை | அணிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
| 1. | சென்னை | 6 | 5 | 1 | 10 | +1.475 |
| 2. | தில்லி | 7 | 5 | 2 | 10 | +0.466 |
| 3. | பெங்களூர் | 7 | 5 | 2 | 10 | -0.171 |
| 4. | மும்பை | 6 | 3 | 3 | 6 | +0.071 |
| 5. | பஞ்சாப் | 7 | 3 | 4 | 6 | -0.264 |
| 6. | கொல்கத்தா | 7 | 2 | 5 | 4 | -0.494 |
| 7. | ராஜஸ்தான் | 6 | 2 | 4 | 4 | -0.690 |
| 8. | ஹைதராபாத் | 6 | 1 | 5 | 2 | -0.264 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...