2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

விரைவில் பந்துவீசுவேன்: ஹார்திக் பாண்டியா தகவல்

நெருக்கடியான சூழல் தான் எங்களுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த உதவுகிறது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 10:28 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஹார்திக் பாண்டியா பந்துவீசுவாரா, மாட்டாரா?

இந்திய ரசிகர்கள் மனத்திலுள்ள கேள்வி இது.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா நான்கு ஓவர்களையும் வீசுவார் என இதற்கு விளக்கம் அளித்தார் தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா. ஆனால், ஐபிஎல் 2021 போட்டியிலேயே பாண்டியா இதுவரை பந்துவீசாததால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவரால் எப்படிப் பந்துவீச முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

2019 அக்டோபரில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் பாண்டியா. அதன்பிறகு விளையாடிய 41 சர்வதேச ஆட்டங்களில் 46 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசியாக ஜூலை 25 அன்று இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரு ஓவர்களை வீசினார். 2020 ஐபிஎல் போட்டி முதல் மும்பை அணியில் தொடர்ந்து விளையாடியபோதும் பாண்டியா பந்துவீசவில்லை. இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை விளையாடிய நான்கு ஆட்டங்களில் இரண்டில் பாண்டியா பங்கேற்கவில்லை. பிறகு விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஒரு பேட்டராக அவர் பங்கேற்றார். 

இந்நிலையில் தில்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்துக்கு முன்பு ஸ்டார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாண்டியா கூறியதாவது:

ரன்கள் எடுப்பது என்னுடைய தன்னம்பிக்கைக்கு முக்கியப் பங்களிக்கிறது. அணிக்காக ரன்கள் எடுப்பதுதான் முக்கியம். பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவதற்கான தடைகளை ஒவ்வொரு பந்தாகக் கடக்க வேண்டும். மீதமுள்ள எல்லா ஆட்டங்களையும் நாங்கள் வெல்லவேண்டும். வேறுவழியில்லை. ஆனால் இதுபோன்ற நெருக்கடியான சூழல் தான் எங்களுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த உதவுகிறது. இது கட்டாயம் வென்றாக வேண்டிய ஆட்டம் என்பதை உணர்ந்துள்ளோம். நான் விரைவில் பந்துவீச ஆரம்பிப்பேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.