திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

இரு புதிய ஐபிஎல் அணிகள்: பிசிசிஐ வெளியிட்ட புதிய தகவல்

ஏல விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 20 வரை நீட்டித்துள்ளது பிசிசிஐ.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:22 am

DIN

ஐபிஎல் போட்டியில் புதிதாக இடம்பெறவுள்ள இரு அணிகள் தொடர்பாகப் புதிய தகவலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

2008 முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 8 அணிகள் போட்டியிடுகின்றன. ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ வெளியிட்டது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம். விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது. 

இதையடுத்து 2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. இரு புதிய அணிகளால் பிசிசிஐக்குக் கூடுதலாக ரூ. 7000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்டிருப்பதால் எப்படியும் ஆமதாபாத் நகரின் பெயரில் ஓர் அணி உருவாகும் என அறியப்படுகிறது.

இந்நிலையில் ஏல விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 20 வரை நீட்டித்துள்ளது பிசிசிஐ. பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்ததால் இம்முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. 

இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை அக்டோபர் 25 அன்று துபையில் பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.