சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஐபிஎல்: கேகேஆர் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் சிஎஸ்கே

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. 

News image
Updated On :15 அக்டோபர் 2021, 11:07 am

DIN

கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது. 

2012, 2014 என இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இருமுறையும் ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி வென்றுள்ளது. இருமுறையும் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், கெளதம் கம்பீர். 2012-ல் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் மோதியதில் கொல்கத்தா அணி கோப்பையைக் கைப்பற்றியது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. 

சிஎஸ்கே 16 முறையும் கேகேஆர் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

அதேபோல இந்த வருடம் இரு அணிகளும் விளையாடிய இரு ஆட்டங்களிலும் சிஎஸ்கே வென்றுள்ளது. அதனால் சிஎஸ்கே அணி மீண்டுமொருமுறை கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றவேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பமாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.