மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஒரே அணிக்காக 100 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள் யார்?

சிஎஸ்கேவுக்கு எதிராக நேற்று விளையாடிய பும்ரா தனது 100-வது ஐபிஎல் ஆட்டத்தை விளையாடினார். 

News image
Updated On :20 செப்டம்பர் 2021, 10:12 am

DIN

சிஎஸ்கேவுக்கு எதிராக நேற்று விளையாடிய பும்ரா தனது 100-வது ஐபிஎல் ஆட்டத்தை விளையாடினார். 

2013-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பும்ரா இதுவரை 100 ஆட்டங்களில் 117 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 7.40. 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் நன்கு பந்து வீசிய பும்ராவைக் கண்டறிந்து மும்பை அணிக்குத் தேர்வு செய்தவர் முன்னாள் வீரர் ஜான் ரைட். ஐபிஎல் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் விராட் கோலியை வீழ்த்தி தனது அறிமுக விக்கெட்டை எடுத்தார் பும்ரா. 

நேற்றைய ஆட்டத்துடன் ஒரே அணிக்காக 100 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் பும்ரா இணைந்துள்ளார். இதற்காக 100 என்கிற எண்ணைக் கொண்ட மும்பை அணியின் உடை அவருக்குப் பரிசளிக்கப்பட்டது. 

ஒரே அணிக்காக 100 ஐபிஎல் ஆட்டங்கள்

199 - விராட் கோலி (ஆர்சிபி)
171 - பொலார்ட் (மும்பை)
124 - நரைன் (கேகேஆர்)
122 - மலிங்கா (மும்பை)
100 - பும்ரா (மும்பை)

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.