மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வாகாதது பற்றி ஆர்சிபி நட்சத்திரம் ஹர்ஷல் படேல்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வாகாதது பற்றி ஆர்சிபி அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர்

News image
Updated On :27 செப்டம்பர் 2021, 7:05 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வாகாதது பற்றி ஆர்சிபி அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் பதில் அளித்துள்ளார்.

துபையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கோலி 51, மேக்ஸ்வெல் 56, பரத் 32 ரன்கள் எடுத்தார்கள். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு விளையாடிய மும்பை அணி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அவர் 4 விக்கெட்டுகளை எடுத்ததால் 18.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது மும்பை அணி. சஹால் 3 விக்கெட்டுகளும் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். ஆட்ட நாயகன் விருது மேக்ஸ்வெல்லுக்குக் கிடைத்தது.

ஹாட்ரிக் அனுபவம், உலகக் கோப்பைக்குத் தேர்வாகாதது பற்றி 30 வயது ஹர்ஷல் படேல் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகாதது என் கையில் இல்லை. எந்த அணிக்கு விளையாடினாலும் நேர்மறையாகத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என எண்ணுவேன். பள்ளிகளில் விளையாடிய கிரிக்கெட் ஆட்டங்களில் கூட நான் ஹாட்ரிக் எடுத்ததில்லை. ஐபிஎல் போட்டியில் ஆறு முறை ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல்முறையாக ஹாட்ரிக் கிடைத்துள்ளது. புள்ளிகள் பட்டியலை நாங்கள் பார்க்கவில்லை. அதைப் பார்த்தால் உங்கள் செயல்முறையிலிருந்து கவனம் திசைதிரும்பும். 

ஷார்ஜாவில் நான் மெதுவான பந்துகளை வீசினேன். அபுதாபியில் 80 சதவீத பந்துகளை வேகமாகவே வீசினேன். நிலைமைக்கேற்றவாறு பந்துவீச முயல்வேன். ஏமாற்றுதல் முறையில் பொலார்டின் விக்கெட்டை வீழ்த்தினேன். வைடாகப் பந்துவீசி பிறகு யார்க்கர் வீசினால் அவர் அதைத் தவறவிடுவார் என அணியின் கூட்டத்தில் விவாதித்தோம். ஆட்டத்தில் யார்க்கர் பந்தை வீசுவதை விடவும் அதை மெதுவாக வீச முயற்சி செய்தேன். அதேபோல அந்தப் பந்தை பொலார்ட் தவறவிட்டுவிட்டார். சிலர் மிகத் தாமதமாக கவனத்துக்கு வருவார்கள். நான் அவர்களில் ஒருவன். கடந்த மூன்று வருடங்களில் எனக்குத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.