திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கடைசி ஓவரில் கலக்கிய கார்த்திக் தியாகி: பும்ரா பாராட்டு மழை

கடைசி ஓவரை அற்புதமாக வீசி ராஜஸ்தான் அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்த...

News image
Updated On :22 செப்டம்பர் 2021, 11:57 am IST

பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி ராஜஸ்தான் அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்த கார்த்திக் தியாகிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் பிரபல வீரர் பும்ரா.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் அடித்தது. இளம் வீரர் ஜெயிஸ்வால் 49 ரன்களும் லோம்ரோர் 17 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களும் எவின் லூயிஸ் 36 ரன்களும் எடுத்தார்கள். அடுத்து ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களே அடித்தது. ராகுல் 49 ரன்களும் மயங்க் அகர்வால் 67 ரன்களும் எடுத்தார்கள். 

கடைசி இரு ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற 8 ரன்களே தேவைப்பட்டன. 8 விக்கெட்டுகள் மீதமிருந்தன. மார்க்ரமும் நிகோலஸ் பூரனும் நன்கு விளையாடிக் கொண்டிருந்ததால் 19-வது ஓவரிலேயே பஞ்சாப் அணி வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19-வது ஓவரை வீசிய முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற மற்றொரு எளிதான நிலைமையிலும் பஞ்சாப் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் அட்டகாசமான வெற்றியை அடைந்தது ராஜஸ்தான் அணி. கடைசி ஓவரை அற்புதமாக வீசி 1 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த 20 வயது கார்த்திக் தியாகி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு நம்ப முடியாத வெற்றியைத் தேடித் தந்த 20 வயது கார்த்திக் தியாகி பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ட்விட்டரில் கூறியதாவது:

என்ன ஒரு ஓவர் கார்த்திக் தியாகி. அப்படியொரு அழுத்தமான கட்டத்தில் பதற்றப்படாமல் நிதானமாக இருந்து பணியைச் சிறப்பாக முடித்துள்ளார். அற்புதம். மிகவும் ஈர்த்துள்ளார் என்றார். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், வெங்கடேஷ் பிரசாத், அபினவ் முகுந்த் போன்ற பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் கார்த்திக் தியாகிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.