குருவின் பாதையில் சிஷ்யன்

நவி மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியை டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதுக்கு காரணமாக ரிஷப் கூறும் பதில் தோனியின் பதிலைப் போலவே இருக்கிறது.  
குருவின் பாதையில் சிஷ்யன்

நவி மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியை தில்லி கேபிடல்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதுக்கு காரணமாக ரிஷப் பந்த் கூறும் பதில் தோனியின் பதிலைப் போலவே இருக்கிறது.  

ஐபிஎல் 2022 64வது போட்டி டீ.ஒய்.பாட்டிலில் நடைப்பெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது.

“இந்த தொடர் முழுவதும் நாங்கள் ஒரு மேட்ச் வெற்றிப் பெருகிறோம் இன்னொன்று தோல்வியுறுகிறோம். ஏதோ ஒரு மாற்றம் அணிக்கு தேவைப்பட்டது. அது இப்போது கிடைத்து விட்டதாக தோன்றுகிறது. லிவிங்ஸ்டன் பந்து வீசும் வேகத்தை மாற்றிப் போட்டதால் அவருக்கு நிறைய விக்கெட் விழுந்தது. 

எங்களது ஒரே முடிவு ஆட்டதை இறுதி வரை கொண்டு போவதுதான். இந்த பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் ஆடுகளத்தைக் கணித்து அதற்கு ஏற்றார் போல் விளையாடுவோம். அடுத்த போட்டிக்கு இன்னும் நாள்கள் இருக்கிறது (பிருத்வி ஷா குறித்த கேள்விக்கு)” என ரிஷப் பந்த் வெற்றி குறித்து கூறினார். 

ஆட்டத்தை இறுதி வரை எடுத்து செல்ல வேண்டும் என்பது தோனியின் ஃபார்முலா. தற்போது குருவின் பாதையில் சிஷ்யனும் பயணித்து இருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com