மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திரும்பவும் வருவோம் : பட்லர் நம்பிக்கை

ஐபிஎல் 2022 குவாலிஃபையர்-1 இல் ராஜஸ்தான் அணி குஜராத் அணியிடம் தோல்வியுற்றது. 

News image
ஜாஸ் பட்லர்
Updated On :25 மே 2022, 10:58 am

DIN

ஐபிஎல் 2022 குவாலிஃபையர்-1 இல் ராஜஸ்தான் அணி குஜராத் அணியிடம் தோல்வியுற்றது. 

ஐபிஎல் 2022 இன் அதிக ரன்கள் (718 ரன்கள்) அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் தோல்விக் குறித்து கூறியதவாது: 

இதற்காகத்தான் நாங்கள் அட்டவனையில் முதலிரண்டு இடத்திற்குள் இடம் பிடித்தோம். எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் திரும்பவும் பலமான அணியாக வருவோம்.

எனக்கு ஆரம்பத்தில் ஆடுவதற்கு கடினமாக இருந்தது. சஞ்சு சாம்சன் அருமையாக விளையாடினார். இது என்னுடைய வழக்கமான ஆட்டம் கிடையாது. ஆனால் இறுதி வரை இருந்து என்னால் முடிந்ததை செய்தேன். சில நேரங்களில் விளையாடுவதற்கு கடினமாக இருக்கும். அப்போது அதிகமாக முயற்சித்து அவுட் ஆவதை விடப் பொறுமையாக இருப்பது நல்லது. எதிரணியினர் எனக்கு எப்படி பந்து வீச வேண்டுமென யோசித்து வைத்திருப்பர் என்பது தெரியும். அதனால் நான் பயப்படவில்லை. காத்திருந்து எனக்கான நேரத்தில் விளையாடினேன். 

அஸ்வின், சஹாலை நாங்கள் நம்புகிறோம். இந்த தொடர் முழுவதும் நன்றாக விளையாடியுள்ளனர். பவுலர்களுக்கு சிறிது கடினமான ஆடுகளம் தான். இன்னொரு வாய்ப்பு இருப்பதால் நாங்கள் திரும்பவும் வருவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.