மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ரஜத் படிதாரை புகழ்ந்த விராட் கோலி

ஐபில் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ அணியைத் தோற்கடித்து குவலிஃபையர்-2க்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. 

News image
Updated On :26 மே 2022, 5:56 am

DIN

ஐபில் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ அணியைத் தோற்கடித்து குவலிஃபையர்-2க்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. 

ஆர்சிபி அணியில் 54 பந்துகளில் 112 ரன்கள் எடுத்த ரஜத் படிதார் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். அவரது ஆட்டத்தினைக் குறித்து விராட் கோலி கூறியதாவது: 

ரஜத் விளையாடியதைப் போன்ற ஆட்டத்தை மிகவும் குறைவாகத்தான் பார்த்துள்ளேன். பெரிய போட்டி, ஆட்டத்தின் அழுத்தம், அன்கேப்ட் பிளேயர் ( அந்நாட்டின் தேசிய அணிக்காக விளையாடாத வீரர்கள்) இந்த மாதிரி ஆடுவதை இப்போதுதான் பார்கிறேன். இது எவ்வளவு முக்கியமான போட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் செய்தது மிக மிக முக்கியமானது. யாருமே அதை குறைவாக மதிப்பிட முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக அவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டியே ஆக வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.