ஐபிஎல் 2022: டாஸ் வென்றால் என்ன முடிவெடுப்பது?

பனிப்பொழிவு காரணமாக 2-வதாகப் பந்துவீசுவது சிரமம். அந்த நேரத்தில் பேட்டிங் செய்வதுதான் நல்லது. 
ஐபிஎல் 2022: டாஸ் வென்றால் என்ன முடிவெடுப்பது?

ஐபிஎல் 2022 போட்டியில் டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் இலக்கை விரட்டும் விதமாக முதலில் ஃபீல்டிங் செய்வதையே தேர்வு செய்கின்றன.

இதற்கு இரு காரணங்கள்.

டி20யில் இலக்கை விரட்டுவது எளிது.

இன்னொன்று பனிப்பொழிவு காரணமாக 2-வதாகப் பந்துவீசுவது சிரமம். அந்த நேரத்தில் பேட்டிங் செய்வதுதான் நல்லது. 

ஐபிஎல் 2022 போட்டியில் முதல் 8 ஆட்டங்களில் 2-வதாக பேட்டிங் செய்த 7 அணிகள் வெற்றி பெற்றன.

கடைசி 6 ஆட்டங்களில் நிலைமை மாறிவிட்டது. 6-ல் 4 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 

இதனால் இனி வரும் ஆட்டங்களில் டாஸ் வெல்லும் அணிகள் என்ன முடிவெடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

நவி மும்பையில் இதுவரை நடைபெற்ற 4 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 2 முறையும் இலக்கை விரட்டிய அணிகள் 2 முறையும் வென்றுள்ளன. இதனால் இன்றைய தில்லி - லக்னெள ஆட்டத்தின் முடிவு நிச்சயம் பல புதிய பாடங்களை அணிகளுக்குக் கற்றுத் தருவதாக அமையும்.

டாஸ் வெல்லும் அணிகள், முதலில் ஃபீல்டிங் செய்வதை விரும்பினாலும் எல்லா நேரமும் அவர்கள் எண்ணப்படி அமைந்துவிடுவதில்லை. இதற்குக் கடைசி 6 ஆட்டங்களே உதாரணம். ஐபிஎல் போட்டியின் அடுத்தக் கட்டம் எப்படி இருக்கும் எனப் பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com