புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிக விக்கெட்டுகள்: உமேஷ் யாதவை முந்திய சஹால்

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 இந்திய வீரர்கள் உள்ளார்கள்.

News image
Updated On :11 ஏப்ரல் 2022, 6:06 am

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் உமேஷ் யாதவை விடவும் ஒரு விக்கெட் கூடுதலாக எடுத்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் சஹால்.

ஐபிஎல் போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நிகராக வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

ஆனால் ஐபிஎல் 2022 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 இந்திய வீரர்கள் உள்ளார்கள்.

சனிக்கிழமை வரை அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முதலிடத்தில் இருந்தார். ஆனால் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆட்டங்கள் நிலைமையை மாற்றிவிட்டன. 

தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கேகேஆர் வீரர் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் தான் எடுத்தார். ஆனால் லக்னெளவுக்கு எதிரான 4 விக்கெட் எடுத்ததால் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் சஹால். அதேபோல கேகேஆர் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ், உமேஷ் யாதவுடன் இணைந்து 10 விக்கெட்டுகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் 2022: அதிக விக்கெட்டுகள்

1. சஹால் (ராஜஸ்தான்) - 11 விக்கெட்டுகள்
2. குல்தீப் யாதவ் (தில்லி) - 10 விக்கெட்டுகள்
3. உமேஷ் யாதவ் (கொல்கத்தா) - 10 விக்கெட்டுகள்

4. ஹசரங்கா (ஆர்சிபி) - 8 விக்கெட்டுகள் 
5. அவேஷ் கான் (லக்னெள) - 8 விக்கெட்டுகள்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.